பேராண்மை ! முதல் முறையாக தனியாக திரையரங்கிற்கு சென்று பார்த்தேன். பொதுவாக தனியாக சினிமாக்கு செல்லாதவன் நான். துணையும் கிடைக்கவில்லை, கிடைக்கும்வரை காத்திருக்கும் பொறுமையும் இல்லை; இயக்குனர்.S.P. ஜனநாதன் படைப்பச்சே! . தனியாக சென்று அமர்ந்தேன் "இன்று இந்திய விவசாயத்திற்காக உலகில் முதல் முறையாக செயற்கைகோளை ஏவவுள்ளது" விவசாய குடும்பத்திலிருந்து வந்துள்ள என்னை உட்பட அரங்கில் இருத்த அனைவரும் நிசப்தமாக இருந்தோம் (விவசாயம் வேற்று கிரகத்தில் நடக்கும் அதிசயம் அல்லவா). படம் எழுச்சியுடன் தொடங்கியது, 'துருவன்'(ஜெயம் ரவி) தன் மக்களுடன் தோன்றும் பொழுது அரங்கத்தில் கேலிகை ஒலி தன் நிரம்பியது.
நிறைய படங்களை பார்த்து, பார்த்து பழகிப்போன நமக்கு; குறிப்பாக தமிழ் சினிமாக்கள்.
நடிகர் கமலஹாசன் கூறியதுபோல் "சினிமா பார்த்து பலகீனமான சமுதாயம் தன் இருக்கும்" ஆகையால் யதார்த்தமான காட்சிகளுக்கும், ஒப்பனைகள் தேவை படுகிறது, ஜனநாதன் நன்றாகவே கையான்டிருக்கிறார்.'ஈ ' பார்த்துவிட்டு, "இயக்குனர்.மணிரத்தனத்தை காட்டிலும் தொய்வேற்படாமல் பரிமாரியுள்ளர்" என்பது என்ன எண்ணம், நன் மணி ரத்னத்தை குறைத்து மதிப்பிடவில்லை, அவரை பற்றி நான் சொல்ல தேவையும்மிறாது.
பேராண்மை - தலைப்பே ! பானையின் பத்ததை கூறிவிடுகிறது. இதை நன் தொடக்கத்திலேயே சொல்லியிருக வேண்டும். 'துருவன்' பத்திரத்தில் தொடங்கி கல்பனா, அஜித, துளசி, ஜென்னிபர், சுஷீலா, சூசை, வெளி நாட்டு நடிகர்கள், சோதனை சாவடி பாத்திரங்கள் வரை அனைத்தும் அற்புதம், அற்புதம் !.... எந்த ஒரு பாத்திரமும் ஒப்புக்கு இல்லையென்பதே, ஒரு படத்திற்கு மிகபெரிய பலம்.
"நான் இங்கிலீஷ் பேசுனா என் மக்களுக்குப் புரியாது.
நான் இங்கிலீஷ் பேசுறது உங்களுக்குப் பிடிக்காது"
"கத்தியும், துப்பாகியும் வச்சிக்கிட்டு ஒரு தேசத்தை காப்பாத்த முடியாது" இடங்கலெல்லாம் ஜனநாதனின் தெளிவுரை.
ஒளிப்பதிவாளர். சதீஷ் அருமை.. இசை ?... பின்னணியில் திருப்தி, படத்தி ஓட்டத்தை தடுத்திட கூடதென்ற என்னமோ.. ஒளிப்பதிவாளர்.சதீஷ் தொலைகாட்சிக்களித்த பேட்டியில் "ஜனநாதன் 'நம்ம படம் எல்லோருக்கும் ஒரு reference- அ இருக்கனும் னு ' சொன்னாரு, அதன்படி உழைச்சுயிருக்கோம்"; வார்த்தைகள் அனைத்து உண்மை.....
துருவன் வகுப்பில் பாடமெடுக்கும் போதும் சரி, யுத்தகளத்திலும் சரி பாங்கு மாறாமல் இருப்பது மேன்மை !...... இறுதியில் துருவன் திடலில், பெண்கள் பயிற்சி முடித்து செல்வதும், கணபதி ராம் (பொன்வண்ணன்) ஜனாதிபதி மாளிகையில்.... அழகு !.. அழகு ...
Sunday, February 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment